Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பாராளுமன்ற சபை அமர்வுகளில் பங்கேற்க சபாநாயகர் அனுமதி


 பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜெயசேகர ஆகியோர்   விரும்பின் பாராளுமன்ற சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த தகவலை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு வெளியிட்டுள்ளது. நாளை 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு பாராளுமன்றம் அமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சபை அமர்வுகளுக்கு வர விரும்பினால் அவரை அழைத்து வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரை கேட்டுள்ளார்.

அதேவேளை, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சபைக்கு வர விரும்பினால் அவரை அழைத்து வருவதற்கான வசதிகளை செய்து கொடுக்குமாறு படைக்கள சேவிதர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தை கேட்டுள்ளார்.

No comments