திருகோணமலையில் குடும்ப தகராறு காரணமாக தனது 06மாத குழந்தையை வாளால் வெட்டி கொலை செய்த குடும்பஸ்தர் தனது மாமா மற்றும் மாமி மீதும் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.
சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கப்பல் துறை பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , www.tamilnews1.com
குடும்ப தகராறு காரணமாக தனது மாமனார் வீட்டினுள் நுழைந்த குடும்பஸ்தர் வீட்டில் இருந்த மாமா , மாமி மற்றும் தனது 06 மாத குழந்தை மீது சரமாரியாக வாளினால் வெட்டி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார். www.tamilnews1.com
வீட்டில் படுகாயமடைந்திருந்த மூவரையும் அயலவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர். குறித்த தாக்குதலில் பெண்ணின் (மாமியார்) கை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் , அதனையும் வைத்திய சாலையில் ஒப்படைத்தனர். www.tamilnews1.com
வைத்திய சாலையில் சிகிச்சை பயனின்றி 06 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. அத்துடன் பெண்ணின் துண்டிக்கப்பட்ட கையை மீள இணைக்க வைத்தியர்கள் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்தது.
இந்நிலையில் தம்பதியினர் (மாமா - மாமி) வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலை வைக்கப்பட்டுள்ளது. www.tamilnews1.com
குறித்த சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட நபரை கைது செய்வதற்காக தேடி வருகின்றனர். www.tamilnews1.com







No comments