வெளிமாவட்டங்களில் இருந்து வந்து சட்டவிரோதமான முறையில் யாழில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரையில் தங்கி இருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த மன்னார் மற்றும் கல்பிட்டி மீனவர்கள் 29 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
அவர்களிடமிருந்து தொழிலுக்குப் பயன்படுத்தி 11 படகுகளும் அவற்றின் வெளியிணைப்பு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன
கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரம் இல்லாமல் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் எனும் குற்றச்சாட்டிலையே கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களமும், கடற்படையும் இணைந்தே கைது செய்துள்ளனர்.
www.tamilnews1.com










No comments