Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில்.கணவனுடன் சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு!


யாழில்.கணவருடன் முச்சக்கர வண்டியில் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த மனைவி மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் வேலணை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் . 

சுன்னாகத்தில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு கணவனுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது , திடீரென மயக்கமுற்றுள்ளார். அதனை அடுத்து அவரை , யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

அந்நிலையில் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார். அதேவேளை சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

No comments