மீன்பிடி பூனைகள் இரவு வாழ்க்கையுள்ள விலங்காகும். இரவு நேரங்களில் (நள்ளிரவில்) மீன்கள் பிடிக்க நீர்நிலைகளை நோக்கி வரும்போது வேகமாகவும், கவனிக்காமலும் வரும் சாரதிகளால் இந்த பூனைகள் கொல்லப்படுகின்றன. சமீபகாலமாக வீதிக் கொலைகளால் அல்லது வாகன மோதல்களால் கொல்லப்படும் மீன்பிடிக்கும் பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. www.tamilnews1.com
Prionailurus viverrinus என்ற விலங்கியற் பெயர் கொண்ட மீன்பிடிக்கும் பூனையானது (Fishing Cat) தென்னாசியா மற்றும் தென்கிழக்காசியாவில் காணப்படும் காட்டு பூனையினங்களில் ஒன்றாகும்.
இலங்கையைப் பொறுத்தவரை, இது அழிவின் ஆபத்திலிருக்கும் விலங்காகும்.
6.5 தொடக்கம் 12 கிலோகிராம் நிறையையும், 66 தொடக்கம் 76 சென்ரிமீற்றர் உடல் நீளத்தையும், 25 தொடக்கம் 30 சென்ரிமீற்றர் வால் நீளத்தையும் கொண்டு காணப்படுகின்றது. www.tamilnews1.com
ஆண்கள் பெண்களைவிட சற்று பெரிதாக காணப்படும். ஒலிவ் பச்சை நரை நிறத்தோலில், தலையிலிருந்து முதுகுப் பக்கமாக செல்லும் கறுத்த பட்டிகள் கொண்டும், மற்றும் உடலின் பாகங்களில் புள்ளிகள் கொண்டும் காணப்படும். பிரதான உணவாக மீன்களை எடுத்துக் கொண்டாலும், பறவைகள், எலிகள், மொலஸ்காக்கள், தவளைகள் போன்றவைகளும் சிறியளவில் இடம்பெறும். அத்துடன் சில சந்தர்ப்பங்களில் இறந்துகிடக்கும் பெரிய விலங்குகளின் அல்லது கால்நடைகளின் இறைச்சியையும் உண்ணும்.
இந்த பூனையினங்கள் நீரை விரும்பி அதன் அருகிலேயே எப்போதும் வாழும், நீரில் நடந்தோ, நீண்ட நேரம் மூச்சடிக்கியோ மீன்பிடித்துச் சாப்பிடுகின்ற, ஊனுண்ணியாகும். www.tamilnews1.com
முன்னங்கால்களில் காணப்படும் பகுதியான கவர் அல்லது துடுப்பு போன்ற பகுதி காரணமாக நன்றாக நீந்தக்கூடியது. குறுகிய, தட்டையான வால் சுக்கானாகவும் தொழிற்படும். மிகுந்த பொறுமையுடன், நீண்ட நேரம் காத்திருந்து மீன்களை வேட்டையாடும். நீர்ப் பரப்பில், கால்களினால், பூச்சிகள் ஏற்படுத்துவது போன்ற அதிர்வுகளை ஏற்படுத்தி, மீன்களைக் கவர்ந்து மேற்பரப்புக்கு வரச் செய்தும் வேட்டையாடக்கூடியன.
மீன்பிடிக்கும் பூனையானது ஈர நிலங்களுடன் தொடர்புடைய முக்கியமான ஊனுண்ணியாகும். அவை பிரதானமாக சதுப்பு நிலங்கள், கண்டல் சுழல்கள், புற்படுக்கைகள், குளக்கரை தாவரங்கள், நீரோடைகள், ஆற்றங்கரைகள் போன்றவைகளை அருகிலேயே காணப்படும். வயல்களில்கூட காணப்படும்.
வேகமாக நீரோடக்கூடிய கூழற்றொகுதகளில் அரிதாகவே காணப்படும். இந்தச் சூழற்றொகுதிகளின் இயற்கைச் சமனிலைக்கும், பயிர்நிலங்களிலுள்ள எலிபோன்ற தீங்கு செய்யும் விலங்குகளை அழிப்பதன் காரணமாக, பயிர்நிலங்களின் விளைச்சலுக்கும் அத்தியாவசியமானதுமாகும்.
ஈரநிலங்கள் அழிக்கப்படல் இதன் இருப்புக்கான பிரதான அச்சுறுத்தலாகும். அத்துடன் சட்டவிரோதமாக கண்ணி வைத்து, கூடு வைத்துப் பிடித்தல், நஞ்சு வைத்துக் கொல்லுதல் மற்றும் வீதிகளில் வாகனங்களால் மோதிக் கொல்லப்படுதல், விவசாய இரசாயனங்களின் அதிகளவான பாவனை, நீர்நிலைகளில் மீன்களை அதிகளவாக பிடித்தல் போன்றவை மற்றைய காரணங்களாகும். www.tamilnews1.com
ஈரநிலங்களின் சூழற்றொகுதிகளின் சமனிலைக்கும், விவசாய அறுவடைகளைக் குறைக்கும் எலிபோன்ற விலங்குகளை கட்டுப்படுத்துவதற்கும் உதவும் இந்த காட்டுப் பூனையினங்கள் அழிவின் விளிம்பிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். www.tamilnews1.com
(படங்கள் இணையத்திலிருந்து பெறப்பட்டிருக்கின்றன).
இந்த தகவல்கள் Amritha Ayem என்பவரின் முகநூலில் இருந்து பெறப்பட்டவையாகும்.
நன்றி :- Amritha Ayem
www.tamilnews1.com










No comments