Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழுக்கு வழங்கப்பட்ட 50ஆயிரம் தடுப்பூசிகளும் முடிவடைந்து விட்டன!


யாழ் மாவட்ட பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முதலாம் கட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்று மதியத்துடன் நிறைவடைந்துள்ளது.  www.tamilnews1.com 

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். www.tamilnews1.com 

அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் எனவே ஏற்கெனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் நாளைய தினம் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த பகுதி மக்களுக்கான தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட தடுப்பூசி வந்தவுடன் குறித்த நிகழ்ச்சி நிரலின் படி தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.  www.tamilnews1.com 

எனவே பொதுமக்கள் இது தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை அடுத்தகட்ட ஊசி கிடைத்தவுடன் அந்த நிகழ்ச்சி நிரலின் படி தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படும்.  www.tamilnews1.com 

குறிப்பாக  நேற்று மாலையுடன் 32 ஆயிரம் தடுப்பூசிகள் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் மிகுதி தடுப்பூசியும் நிறைவடைந்துள்ளது எனினும் இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும்  15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என எதிர்பார்த்து இருந்த போதிலும் கூடுதலான மக்கள் ஆர்வம் காட்டி தடுப்பூசியை பெற்றதன் காரணமாக இன்று மதியத் துடன் தடுப்பூசி நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.   www.tamilnews1.com 


www.tamilnews1.com 

No comments