யாழில் சீன பிரஜை வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றிய நபர் இலங்கை பிரஜை என தெரிவிக்கப்படுகிறது.
பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளார் என தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதிவேற்றி, அதில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில் அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியும் இருந்தார்.
இந்நிலையில் குறித்த சுமந்திரன் பதிவேற்றியுள்ள படத்தில் உள்ள நபர் சீன பிரஜை இல்லை எனவும் , அவர் அக்கரைப்பற்றை சேர்ந்த மொஹமட் ஹனிபா எனும் இஸ்லாமியர் எனவும் , அவர் யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியை சேர்ந்த தமிழ் பெண்ணொருவரை திருமணம் முடித்து குடத்தனையில் வசித்து வரும் நிலையில் , அப்பகுதியில் இடம்பெறும் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
No comments