Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சனநெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்


வார இறுதி நாட்களில் கடைகள் உட்பட சனநெரிசலான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கேட்டுகொண்டுள்ளார்.

கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்றும் கூறினார்.

எனவே நாட்டில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பொது மக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதேவேளை, கேகாலை மாவட்டத்தின் 2 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அல்கொட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஹிகுலோய, மஹவத்த, ஹலமட ஆகிய பகுதிகளும் டென்ஸ்வோர்த் தோட்ட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

No comments