Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பயணத்தடையும் - நாமும் - மாணவர்களுக்கான ஒளிப்பட போட்டி!


பயணத்தடை காலப்பகுதியில் பாடசாலை மாணவர்களின்  திறமைகளை வெளிக்கொணரும் நோக்கோடு தமிழ்நியூஸ்1 இணையத்தளம் நடாத்தும்  ஒளிப்படபோட்டி

போட்டிக்கான கரு –  "பயணத்தடையும் - நாமும்"

போட்டி நிபந்தனை.

இலங்கை பாடசாலை மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

 தரம் 6 முதல் உயர்தரம் வரையிலான மாணவர்கள் பங்குபெற்ற முடியும். 

ஒளிப்படங்கள் குறிப்பிட்ட மையக்கருவுடன் சம்மந்தப்பட்டதாக அமைய வேண்டும்.

ஒளிப்படங்கள் குறைந்தது 2MB க்கு மேல் இருக்க வேண்டும்.
 
போட்டோசொப் உள்ளிட்ட செம்மையாக்கல் (எடிட்டிங்) ஏற்கப்படமாட்டாது.

ஒரு போட்டியாளர் ஆக கூடியது மூன்று படங்களையே சமர்ப்பிக்க முடியும்.
 
கொரோனா தொடர்பிலான சுகாதார விதிமுறைகள் , அரசின் தீர்மானங்கள் , கட்டுப்பாடுகள் என்பவற்றை பிள்ளைகள் பின்பற்றுவதனை உறுதிப்படுத்த வேண்டியது பெற்றோரின் பொறுப்பாகும். 
  
போட்டியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒளிப்படங்கள் எமது முகநூல் பக்கத்தில் பகிரப்படும். அதில் விருப்புகளின் (like) அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
 
உங்களது ஒளிப்படங்களை அனுப்ப வேண்டிய  மின்னஞ்சல்  முகவரி :-   tamilnews1official.gmail.com
 
உங்களது ஒளிப்படங்களை 05.07.2021 இற்கு முன் எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

போட்டி தொடர்பான அனைத்து இறுதி முடிவுகளும் , தீர்மானங்களும் தமிழ்நியூஸ்1 இணையத்தளத்தினதுடையது.

வெற்றியாளர்களுக்கான பரிசில்கள்.

-முதல் பரிசு Rs : 5000.00
-இரண்டாம் பரிசு Rs : 3000.00
-மூன்றாம் பரிசு Rs : 1500.00

 
விண்ணப்பப்படிவங்கள் பின்வரும் மாதிரியில் தயாரிக்கப்பட வேண்டும்.

பெயர்:-
முகவரி:-
பால்நிலை:-
பிறந்த திகதி:-
வயது:-
பாடசாலை -
தொடர்பிலக்கம் -
ஒளிப்படம் எடுக்க பயன்படுத்திய சாதனம் - 
(கையடக்க தொலைபேசி / ஒளிப்படக்கருவி)

உறுதி மொழி  

இந்த ஒளிப்படம் என்னால் எடுக்கப்பட்டது என்பதனை உறுதிப்படுத்துகிறேன்.
போட்டியாளரது ஒப்பம்:-

எனது பிள்ளை போட்டியில் பங்குபற்றுவதற்கு சம்மதிக்கின்றேன். இந்த ஒளிப்படம் என் பிள்ளையால் எடுக்கப்பட்டது என்பதனையும் உறுதிப்படுத்துகிறேன்.
 
 பெற்றோர் ஒப்பம்:-

(உறுதி மொழியை கைகளால் எழுதி,  ஒப்பமிட்ட பின்னர் அதனை படம் எடுத்து அனுப்ப முடியும்)


மேலதிக விபரங்களுக்கு  tamilnews1official.gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். 

No comments