Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். ஆலயங்களில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை!


யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர்  க.மகேசன்  தெரிவித்துள்ளார். 

யாழ் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால்  வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி யாழ்ப்பாண குடாநாட்டில் இந்து ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் திருவிழாக்கள் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

 எனினும் வழங்கப்பட்டுள்ள அனுமதியிணை  மக்கள்பின்பற்றவில்லை.  சுகாதார நடைமுறையினை  பின்பற்றாது  இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது.

இது ஒரு  அபாய நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரு விடயம். எனவே பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.

 நேற்றைய தினம் கரவெட்டிப் பகுதியில் இந்து ஆலய பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டவர்களில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒத்துழைத்தால் மாத்திரமே இந்த தொற்றில் இருந்து தப்பிக்க முடியும். சுகாதார பிரிவினரால் சில கட்டுப்பாடுகள்  தளர்த்தப்பட்டுள்ள போதிலும், அந்த தளர்வினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதன் மூலமே வழமை போல் எமது செயற்பாடுகளை செயற்படுத்த முடியும். 

எனவே பொதுமக்கள் தற்போதுள்ள நிலைமையினை அனுசரித்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படவேண்டும்  என்றார்

No comments