Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அமைச்சரவையில் ஐந்தாவது ராஜபக்சவாக பசில்!


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச இன்று (06) நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். அதன்பின்னர் நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளது. 10.30 மணியளவில் பசில் ராஜபக்ச, சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

இதன்பின்னர் பசில் ராஜபக்ச நிதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இத்துடன், அமைச்சரவையில் ஐந்தாவது ராஜபக்ச உறுப்பினராக பசில் ராஜபக்ச வலம்வரவுள்ளார்.

அமைச்சரவையின் பிரதானியாக கோட்டாபய ராஜபக்ச உள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன்

நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்சவும், 

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவும் பதவி வகிக்கின்றனர்.

தற்போது புதிதாக பசில் ராஜபக்ச நிதியமைச்சராக பதவியேற்கிறார்.

இதனைத்தவிர சசிந்திர ராஜபக்ச இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது

No comments