தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் முகநூலில் பதிவேற்றம் செய்தவர் , பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலையை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது முகநூலில் விடுதலைப்புலிகள் தொடர்பிலும், அமைப்பின் தலைவர் தொடர்பிலும் பதிவுகளை பதிவேற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு , தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதேவேளை கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரின் இலங்கை பற்றிய தீர்மானத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது,
இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து மீளாய்வு செய்வதற்கான அமைச்சரவை உப குழுவொன்றினை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை அனுமதிப்பத்திரம் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலையே புலிகள் தொடர்பில் முகநூலில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் இளைஞனர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய்யப்பட்டுள்ளார்.
No comments