Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடிப்பு - திருமணத்திற்கு 150 பேரை அழைக்கலாம்!


இன்று (10) முதல் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும், தற்போது விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அடுத்த 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, திருமண வைபவங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருமண மண்டபங்களில் 25 சதவீதம் அல்லது 150க்கும் குறைந்த அளவில் நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் விகாரைகள் போன்ற மதஸ்த்தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகாத மரணங்களின் இறுதிக் கிரியைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சடலம் விடுவிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் இறுதி கிரியைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இறுதிக் கிரியைகளின் 50 பேர் கலந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கருத்தரங்குகள், பட்டறைகள் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இவற்றில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக உணவகங்கள் (உள்ளக ஆசன வசதிகளை கொண்ட) மற்றும் விடுதிகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments