பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரான 44 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய மற்றுமொரு சம்பவம் தெரிய வந்துள்ளது.
இதன் போது, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணி புரிந்து வந்த பணிப்பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
22 வயதுடைய குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, அவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments