Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்ற முடியாது


பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்ற முடியாது என சுற்றாடல் அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.

ஆனால் அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க சில திட்டங்களை செயற்படுத்துவதன் மூலம் இதைச் செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.

3R stands முறை மூலம் இதனைக் குறைக்க முடியுமென்றும் இது குறைத்தல்-மறுசுழற்சி- மறுபயன்பாடு ஆகியவற்றைக் குறிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டைக் குறைக்க உதவுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தியாவசியமான ஆனால் மாற்று பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்புகளை தடைசெய்யும் பல அமைச்சரவை ஆவணங்களை அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும்  பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்க மூன்று மாத கால அவகாசம் அளித்துள்ளதாகவும் ஆனால், இதுபோன்ற சலுகைகளை மீண்டும் மீண்டும் வழங்க தயாராக இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் மற்றும் நாட்டின் மனித ஆரோக்கியத்தை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments