Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

உறவினர்களை அழைக்க வாகனத்தை கொழும்புக்கு சேர்விஸ்க்கு அனுப்பிய செயலாளர்!


கொழும்பில் தங்கியுள்ள தமது உறவினர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைக்க அமைச்சின் வாகனத்தை, அமைச்சின் செயலாளர் கொழும்புக்கு சேர்விஸ்க்கு அனுப்பி எடுத்துள்ளார். 

வடமாகாண அமைச்சின் செயலாளர் ஒருவரின் உறவினர்கள் கொழும்பில் தங்கியுள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணம் வருவதற்கு போது போக்குவரத்து வசதிகளோ , அல்லது அத்தியாவசிய தேவைகள் அல்லாது மாகாணம் விட்டு மாகாணம் செல்ல முடியாத நிலை காணப்படுவதனால் வர முடியாத நிலையில் இருந்துள்ளனர். 

அந்நிலையில் அமைச்சின் செயலாளர் , அமைச்சின் வாகனம் ஒன்றினை "மெக்கானிக்கல் சேர்விஸ்க்கு" என கொழும்புக்கு அனுப்பி, சேர்விஸ் போட்ட பின்னர் அந்த வாகனத்தில் கொழும்பில் இருந்த தனது உறவினர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்துள்ளார். 

திணைக்கள வாகனங்கள் கொழும்பு இரத்மலானை பகுதியில் உள்ள சேர்விஸ் நிலையத்திற்கே சேர்விஸ்க்கு கொண்டு செல்லப்படும். அந்நிலையில் குறித்த வாகனம் இம்முறை வத்தளை பகுதியில் உள்ள சேர்விஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இதேவேளை குறித்த அமைச்சுக்கு சொந்தமான மற்றுமொரு வாகனம் இரத்மலானை சேர்விஸ் நிலையத்தில் சேர்விஸ் போடப்பட்ட நிலையில் , அந்த வாகனத்தை எடுத்து வர யாழில் இருந்து சாரதி செல்ல முடியாத நிலையில் , அந்த வாகனம் அங்கேயே கடந்த மூன்று மாத கால பகுதியாக உள்ள நிலையில் , மற்றுமொரு வாகனத்தை தனது உறவினர்களை அழைத்து வருவதற்காக கொழும்புக்கு சேர்விஸ் க்கு குறித்த அதிகாரி அனுப்பி எடுத்துள்ளமை அமைச்சு அதிகாரிகள் மட்டத்தில் பேசுபொருளாக உள்ளது. 

No comments