நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்த தங்கையும் , தங்கையை காப்பாற்ற நீர் வீழ்ச்சியில் பாய்ந்த அண்ணனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
படல்கும்பர பிரதேசத்தில் உள்ள நீர் வீழ்ச்சியினை பார்வையிடுவதற்காக ஒக்கம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த குடும்பத்தினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனர் www.tamilnews1.com
நீர் வீழ்ச்சியினை பார்வையிட்டுக்கொண்டிருந்த வேளை 23 வயதுடைய யுவதி கால் இடறி நீர் வீழ்ச்சியினுள் விழுந்துள்ளார். உடனே அவரை காப்பாற்றும் நோக்குடன் யுவதியின் அண்ணன் ஆனா 30 வயதுடைய இளைஞனும் நீர் வீழ்ச்சியினுள் பாய்ந்துள்ளார். www.tamilnews1.com
அந்நிலையில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இளைஞனுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்ததாகவும் , உயிரிழந்த யுவதி எதிர்வரும் 15ஆம் திகதி தாதியர் பயிற்சிக்காக பதுளை தாதியர் பயிற்சி கல்லூரியில் இணையவிருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். www.tamilnews1.com
www.tamilnews1.com







No comments