Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் இன்று 239 பேருக்கு தொற்று - 10548 பேர் தனிமைப்படுத்தலில்!


யாழ்.மாவட்டத்தில் இன்று 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மொத்தமாக 10725 நபர்களுக்கு இற்றைவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த காலத்தைவிட தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

நேற்றைய கணக்கெடுப்பின்படி 213 நபர்கள் இதுவரை இறப்புக்குள்ளாகியுள்ளார்கள். மேலும் , 3686 குடும்பங்களை சேர்ந்த 10548 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

எனவே, யாழ்.மாவட்டத்தில் பொதுமக்கள் இறுக்கமாக சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளது. 

சுகாதார அமைச்சின் வழிகாட்டல் மற்றும் கொவிட் செயலணியின் வழிகாட்டலுக்கு அமைய பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றுவதுடன் மிக அவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும். 

அதேவேளை சுகாதார நடைமுறைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல், தேவையற்ற நடமாட்டம் , ஒன்றுகூடல்களை தவிர்க்க வேண்டும். எனவே இந்த நடைமுறைகளைப் பின்பற்றி எம்மையும், குடும்பத்தையும் , சமூகத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும்,யாழ்மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள்  தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும், அதேவேளை எழுந்து நடமாட முடியாத வயோதிபர்களுக்கு வீடுவீடாக சென்று தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை சுகாதார தரப்பினர், கிராமசேவையாளர் மற்றும் இராணுவத்தினரும் கைகோர்த்து தடுப்பூசி நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்துள்ளார்கள். 

தடுப்பூசிகளை விரைந்துபெற்றுக்கொள்வது எமது பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்காக,  இறப்புக்களை தவிர்க்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி தங்களையும் , சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் தடுப்பூசியினைப் பெற்று தத்தமது பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வது அவசியமென மேலும் தெரிவித்தார்.

No comments