இலங்கையில் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 27 பொலிசார் உயிரிழந்துள்ளதாகவும் , அதில் 10 பேர் இந்த மாதத்தில் உயிரிழந்துள்ளனர். www.tamilnews1.com
கித்துல்கல, கலஹா, தெமட்டகொடை, காலி, முகத்துவாரம், உடுகம, அம்பன்பொல, தேசிய பொலிஸ் கல்லூரி, மட்டக்களப்பு மற்றும் கேகாலை ஆகிய பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றிய 10 பேர் கடந்த முதலாம் திகதி முதல் இன்றைய தினமான 27ஆம் திகதி வரையில் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 27 பேரில் , ஒரு பிரதான பொலிஸ் பரிசோதகரும், ஒரு பொலிஸ் பரிசோதகரும் அடங்குவதுடன் உப பொலிஸ் பரிசோதகர்கள் 6 பேர், 13 பொலிஸ் சார்ஜன்ட் கள், 6 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் உள்ளடங்குகின்றனர். www.tamilnews1.com
www.tamilnews1.com







No comments