கீரிமலை , காரைநகர் கடற்கரைகளில் பிதிர் கடன்களை நிறைவேற்ற அனுமதியில்லை என சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.
ஆடி அமாவாசை தினமான நாளைய தினம் இந்துக்கள் கடலில் நீராடி தமது பிதிர்களுக்கு கடன்களை நிறைவேற்றுவார்கள். கொரோனா பெருந்தொற்று காரணமாக நாளைய தினம் குறித்த பகுதி கடற்கரைகளில் ஒன்று கூட அனுமதியில்லை என சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.
தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்குமுகமாக கடற்கரைகளுக்கு மக்களை வர வேண்டாம் என சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






No comments