கொரோனோ தொற்றுக்கு கிராமத்தினுள் உட்புகாம இருக்க கிராமங்களை சுற்றி பிரித் நூல் கட்டப்பட்டு பிரித் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.
மாவத்தகம பிரதேசத்தில் உள்ள ஆறு கிராம எல்லைகளை ஒருங்கிணைத்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவ்வாறாக பிரித் நூல் கட்டப்பட்டுள்ளது.
மாவத்தகம மீதன்வல உடகம் புராண போதிமலு விஹாரையின் விஹாராதிபதி கல்அமுணே சமித தேரரின் தலைமையில், அப்பகுதியில் உள்ள 06 கிராமங்களை ஒருங்கிணைத்து பிரித் நூல் கட்டப்பட்டு ,தினமும் பிரித் பாராயணம் ஓதும் நிகழ்வும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விஹாரையில் இருந்து கிராமங்களுக்குச் செல்லும் சகல பிரதான வீதிகள் மற்றும் உள் வீதிகள் அனைத்திலும் இந்த பிரித் நூல் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் அளவில் கட்டப்பட்டுள்ளன.
மெத்தெகம்கொட உடகம, வம்பியான்கொட, வடரெக, பிடகந்த, முவன்கந்த ஆகிய கிராமங்களில் 466 வீடுகளை முன்மாதிரியாகக் கொண்டு இந்த பிரித் நூல் கட்டப்பட்டுள்ளது என்று இவ்விஹாரையின் பிராதான விஹாராதிபதி தெரிவித்தார்.
இவ்வாறு நீண்ட நூல் கட்டப்பட்டு பிரித் பாராயணம் தெற்காசியாவிலோ அல்லது வேறு எங்குமே இடம்பெறவில்லை. எமது பிரதேசத்தில் உள்ள கிராம மக்கள் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த சமய நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.







No comments