சிறையில் உள்ள நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அங்குனுகொலபலஸ்ஸ சிறையில் ரஞ்சன் ராமநாயக்க தண்டனை காலத்தை அனுபவித்து வருகின்றார் இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஞ்சன் ராமநாயக்க மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களால் அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments