குருநகர் இளைஞன் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களும் நீதிமன்ற உத்தரவில் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
குருநகர் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த ஜெரன் (வயது 24) எனும் இளைஞன் படுகொலை செய்யப்பட்டார்.www.tamilnews1.com
அன்றைய தினம் குறித்த இளைஞன் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது , மோட்டார் சைக்கிளில் வந்த மற்றோரு இளைஞர் குழு அவர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர். www.tamilnews1.com
குறித்த சம்பவத்தில் மூவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்தார். www.tamilnews1.com
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்திய போது ஐந்து பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது. www.tamilnews1.com
அதேவேளை உயிரிழந்த இளைஞனுக்கும் தாக்குதல் நடத்திய இளைஞர் குழுவிற்கும் இடையில் கடந்த 2018ஆம் ஆண்டு மோதல் இடம்பெற்றதாகவும் , அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் , தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் , அவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் , பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
www.tamilnews1.com







No comments