Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கொடி நாளை - உள்வீதியிலையே திருவிழா


தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவிழாக்கள் உள் வீதியில் மட்டுமே நடைபெறவுள்ளது. மகோற்சவ காலங்களில் உபாயக்காரர்கள் மட்டுமே ஆலயத்தினுள் அனுமதிக்கப்பட்டு , துர்க்கை அம்மன் உள் வீதியுலா மட்டுமே வலம் வரவுள்ளார். 

ஆலய சூழலில் காவடிகள் , அங்க பிரதஷ்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் வியாபர நிலையங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

முதியவர்கள் , குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து அடியவர்களும் வீடுகளில் இருந்து அம்மனை வழிபடுமாறும் , மகோற்சவம் மிக அமைதியாக நடைபெறுவதற்கு ஒத்துழைக்குமாறும்  ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

No comments