Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

விரைவில் ஸ்ரான்லி வீதி அகலமாக்கப்படும்!


ஸ்டான்லி வீதியானது வீதி நடுவில் இருந்து இரு பக்கமும் 8m அகலிக்கப்பட உள்ளது. இவ்வீதியில் வாகன தரிப்பிடம், வாய்க்காலுடன் கூடிய நடைபாதை, பெற்றோல் நிலைய சந்தியில் சுற்றுவட்டம் என்பன அமைக்கப்படவுள்ளன என யாழ்,மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

ஸ்ரான்லி வீதி அகலிப்பு தொடர்பில் இன்றையதினம் நேரடியாக ஸ்ரான்லி வீதிக்கு களவிஜயம் மேற்கொண்டு,  உடைத்தகற்றப்பட வேண்டிய வர்த்தக நிலையங்களின் பகுதிகள் தொடர்பில் நேரடியாக பார்வையிடப்பட்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் , 

வீதி அகலிப்புக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக கடை உரிமையாளர்களால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

வீதி நடுவில் இருந்து இரு பக்கமும் 8m அகலிக்கப்பட உள்ளது. இவ்வீதியில் வாகன தரிப்பிடம், வாய்க்காலுடன் கூடிய நடைபாதை, பெற்றோல் நிலைய சந்தியில் சுற்றுவட்டம் என்பன அமைக்கப்படவுள்ளன.  

குறித்த வீதி புனரமைப்பு பணிகளை விரைவாக ஆரம்பித்து முடிவுறுத்தி தருமாறு என்னால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
குறித்த வீதி புனரமைப்பு பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், இதனால் ஏற்படும் அசௌகரியங்களை பொறுத்துக்கொள்ளுமாறும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் வர்த்தகர்களையும் பொதுமக்களையும் அன்புரிமையுடன் கேட்டுகொள்கிறேன் என தெரிவித்தார். 

வீதியினை பார்வையிட முதல்வருடன் ,  மாநகர பிரதி ஆணையாளர், மாநகர பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியியலாளர், மின்சாரசபை மின் அத்தியட்சகர், ரெலிக்கொம் பொறியியலாளர் மற்றும் குறித்த வீதி அகலிப்பு பணியில் ஈடுபட உள்ள ஒப்பந்தகார நிறுவனமான hanco நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர், பொறியியலாளர் உள்ளிட்ட ஊழியர்கள், யாழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஆகியோரும்  சென்றிருந்தனர். 








No comments