கிளிநொச்சி பூநகரி கடற்பகுதியில் வலைகளால் சுற்றப்பட்டு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுகிறது.
சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் கடற்பகுதியில் சடலம் ஒன்று மிதந்த நிலையில் காணப்பட்டதை கண்ணுற்ற வீதியால் சென்றோர் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த பகுதி கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியா ? அல்லது யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியா என்பதில் குழப்பம் நிலவியதால் சடலத்தை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.







No comments