கடவத்த, எல்தெனிய பகுதியில் உள்ள வீடொன்றின் ஏற்பட்ட தீ விபத்தின் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.
இன்று (28) அதிகாலை குறித்த வீட்டின் மேல் மாடியில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் வீட்டில் இருந்த 57 வயது கணவன் மற்றும் 53 வயது மனைவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.







No comments