நாளை முதல் மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் உத்தியோகத்தர்களின் தொழில் அடையாள அட்டையைச் சரிபார்க்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பேருந்து சாரதிகள் அல்லது அவர்களின் உதவியாளர்கள் பயணிகளின் தொழில் அடையாள அட்டைகளை சரிபார்ப்பது நடைமுறையில் இல்லை. எனினும் தற்போதைய சூழ்நிலையில் பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதே இதன் நோக்கம் என்று என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டார்.
மாகாணத்தின் உள்ளே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளிடம் தொழில் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்படுவதில்லை.ஆனால் மாகாணங்களுக்கு இடையே பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகளிடம் தொழில் அடையாள அட்டை உள்ளமை தொடர்பில் சரிபார்க்கப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
No comments