Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சேதனப் பசளையினை விவசாயிகளே உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது!


நெற்செய்கைக்கு தேவையான சேதனப் பசளையினை விவசாயிகள் தாங்களே உற்பத்தி செய்ய வேண்டிய கடப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது என  மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் (யாழ்ப்பாணம் மாவட்டம்) அஞ்சலாதேவி சிறீரங்கன்  தெரிவித்துள்ளார்.  www.tamilnews1.com 
 
வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. அதன் போதே ஊடகங்களுக்கு அவ்வாறு தெரிவித்தார்.    www.tamilnews1.com 
 
மேலும் தெரிவிக்கையில் ,   www.tamilnews1.com 
 
யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் காலபோகத்தில் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேயர் அளவில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 
 
அதற்கமைய  விவசாய அமைச்சின் ஆலோசனை மற்றும் விவசாய திணைக்களத்தின்  அறிவுறுத்தலுக்கமைய விவசாயிகள் சேதனப் பசளை உற்பத்தி செய்வதற்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்  நோக்கத்திற்காக இன்றைய தினம் ஒரு வாகன பேரணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வாகன பேரணியானது நல்லூர், சண்டிலிப்பாய், உடுவில் மற்றும் சங்காணை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விவசாய போதனாசிரியர் பிரிவுகளில் இன்றையதினம் மேற்கொள்ளப்படவுள்ளது.
 
இதன்போது விவசாயிகளுக்கு சேதன பசளை  உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.    www.tamilnews1.com 
 
இந்த விழிப்புணர்வு பேரணியில் வடக்கு மாகாண விவசாய பளிப்பாளர் சி.சிவகுமார், மாகாண பிரதி  விவசாயப் பணிப்பாளர் (யாழ்ப்பாணம் மாவட்டம்) அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன், விவசாய போதனாசிரியர்கள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்தனர்.    www.tamilnews1.com 
 
 
 

No comments