Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் நாளை முதல் ஆரம்பம்!


மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வெரஹெர அலுவலகங்கள் மூலமான பொது மக்களுக்கான சேவைகள் நாளை முதல் சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக மீள ஆரம்பிக்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்
 011 2 677 877 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, முற்பதிவு செய்து திகதி, நேரத்தை பெற்றுக் கொண்டவர்களுக்கு, சேவைகளை பெற முடியும். 
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள மாவட்ட நடவடிக்கைகள் அந்தந்த மாவட்ட செயலாளர்களின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்படும்.

வாகன பதிவு தொடர்பில் - 070 7677877 என்று தொலைபேசி இலக்கத்துடாகவும், சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் - 070 7677977 என்று தொலைபேசி இலக்கத்துடாகவும் அலுவலக நாட்களில் மு.ப. 9.00 - பி.ப. 4.00 மணி வரையிலான காலப்பகுதியில் இது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments