கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, இன்று (03) மாலை வீடுகளில் விளக்கேற்றுமாறு, ஐக்கிய மக்கள் சக்தி, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் இணை ஊடகப்பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா தொற்றுப்பரவல் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென பிரார்த்தித்து, இன்று மாலை 6. 06க்கு வீடுகளில் விளக்கேற்றுமாறு, அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து சுகாதார
ஊழியர்கள், பொலிஸார் மற்றும் முப்படையினர் உள்ளிட்ட அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்திக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது







No comments