எம்பிலிபிட்டிய, கரதமண்டிய பகுதியில் கணவன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இன்று (26) காலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







No comments