நாட்டு மக்கள் பொறுமையிழக்க முன்னர் இராஜினாமா செய்து மீண்டும் மக்களுக்கொரு வாய்ப்பை வழங்குங்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை கோரியுள்ளார்
திஸ்ஸமகரகமவில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டில் வரிசை முறை ஆரம்பித்துள்ளது. நடைமுறைக்கு சாத்தியமற்ற பொருத்தமற்ற நிதி முகாமை மற்றும் பொருளாதார கொள்கைகளே இவற்றுக்கு பிரதான காரணமாகும்.
ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டு மக்களுக்கு நிதி சலுகைகளை வழங்குவதற்கு பதிலாக கோடீஸ்வரர்கள் , செல்வந்தர்களுக்கே நிதி சலுகை வழங்கப்பட்டது. அதனால் அரசாங்கம் இழந்த வருமானங்களை அவர்கள் ஈட்டிக்கொண்டனர்
அரசாங்கம் வருமானங்களை இழந்தமையால் நாட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியாது போயுள்ளது. சதொசவிற்கு சென்று அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது , அவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலையே வழங்கப்படுகிறது.
இதற்காகவா 69 இலட்சம் பேர் வாக்களித்தனர். அரிசி ஊழல் யுகமாக , சீனி ஊழல் யுகமாக உள்ளது. கட்டாயமாக நாட்டின் பொருளாதார கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இந்த நாட்டை மேலும் வீழ்ச்சி அடைய செய்யாமல் இராஜினாமா செய்ய கோருகிறோம். நீங்களாக விலகி நாட்டு மக்கள் மீண்டும் அரசாங்கத்தை தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்குங்கள்.
நாட்டு மக்கள் பசியோடும் கவலையோடும் உள்ளார்கள். நாம் மேலும் பொறுமையோடு இருக்க மாட்டோம். இந்த கவலைக்கிடமான முறையை தொடர்ந்து எம்மால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. நாட்டு மக்களும் இனியும் பொறுமையோடு இருக்க மாட்டார்கள். என தெரிவித்தார்.







No comments