Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் கடந்த 10 நாளில் 62பேர் கொரோனோவால் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால்  உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 10 நாள்களில் 62 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இணுவிலைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும், பருத்தித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும், போதனா மருத்துவமனை விடுதியில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர்.

அதேவேளை பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் பருத்தித்துறையைச் சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும் , வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவரும்,  வீட்டில் உயிரிழந்த நிலையில் கோவிட்-19 தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 322ஆக உயர்வடைந்துள்ளது

No comments