நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) அதிகாலை 04 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் மக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பிலான சுகாதார வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய,
அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்
அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களுக்காக தினமும் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 04 மணி வரை அனுமதி வழங்கப்பட மாட்டாது
பொது போக்குவரத்து சேவைகளின் போது ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்ற முடியும்
பொது போக்குவரத்தின் போது வாகனங்களின் குளிரூட்டியை பயன்படுத்தாமல் வாகனங்களின் ஜன்னல்களை திறக்க வேண்டும்
அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசத்தை அணிந்திருந்தல் வேண்டும்
மறு அறிவித்தல் வரை மக்கள் ஒன்றுகூடும் வகையிலான எந்த கூட்டங்களையும் நடத்த முடியாது
No comments