பலாங்கொடை, பஹந்துடாவா நீர்வீழ்ச்சியை பகுதியில் ஜோடி ஒன்று பாலியல் செயல்களில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்ட தனிநபர்களைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் வீடியோவைப் பதிவேற்றுவதற்கு காரணமானவர்களையம் கண்டறிய போலீஸ் சைபர் கிரைம் பிரிவு ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், பஹந்துடாவா நீர்வீழ்ச்சியை ஒட்டி அநாகரீகமாக நடந்து கொண்ட ஜோடியை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பஹந்துடாவா நீர்வீழ்ச்சி இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தமான சுற்றுலா தளமாகும். குறித்த சுற்றுலா தளத்தில் ஜோடி ஒன்று பாலியல் உறவில் ஈடுபட்டு , அதனை காணொளியாக பதிவு செய்து இணையத்தளங்கள் , சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி இருந்தனர். குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்ததுடன் , அது தொடர்பிலான பதிவுகளும் , மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன.







No comments