Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இன்றைய ராசி பலன் - 05.09.2021


மேஷம்

இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமை சற்று குறைந்து காணப்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும்.

ரிஷபம்

இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வருமானம் பெருகும்.

மிதுனம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு தொழில் ரீதியாக பயணம் செல்வதற்கான வாய்ப்பு அமையும்.

கடகம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் இருக்கும். சிலருக்கு வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

கன்னி

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். அசையா சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.

துலாம்

இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவில் சில தடை தாமதங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் அவர்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பழைய நண்பர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும். சுபகாரியம் கைகூடும்.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களில் அதிக கவனம் தேவை.

மகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கையிருப்பு குறையும். எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிடைக்கும். பண பற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும்.

மீனம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பொருளாதார நெருக்கடிகள் சற்று குறையும்.

No comments