Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூரான் வீதியில் பெருமளவான பொலிஸார் குவிப்பு!


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்றைய தினம் நல்லூர் ஆலய உள்வீதியில் இடம் பெற்ற  நிலையில் ஆலய சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 
 
நல்லூர் ஆலய தேர் உற்சவத்தினை தரிசிக்க  அடியவர்கள் ஆலயத்திற்கு வருவதை தடுக்கும் முகமாக  நல்லூர் ஆலய சூழலில்  பாதுகாப்பு  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
 
 ஆலய உற்சவத்தின் போது அமைக்கப்படும் வீதித் தடைகளை தாண்டி யாரும் உட்  செல்ல அனுமதிக்கப்படவில்லை அத்தோடு ஆலயத்திற்கு முன்பாக பொலிசாரின் பேருந்து வண்டி ஒன்று வீதிக்கு குறுக்காக நிறுத்தப்பட்டுள்ள தோடு  நல்லூர் ஆலய வளாகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments