நிறை போதையில் தந்தையுடன் முரண்பட்ட மகன் தந்தையின் கண்ணை தோண்டி எடுத்துள்ளார் .
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியாவட்டவான் பாடசாலை வீதியில் நேற்றையதினம் சனிக்கிழமை இச்சம்பவம் இடப்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் போதையில் வீட்டுக்கு வந்த மகன் வீட்டிலிருந்த 67 வயதான தந்தையுடன் முரண்டப்பட்ட 19 வயதான மகன் , ஒரு கட்டத்தில் தந்தையாரை பலமாக தாக்கி அவரது ஒரு பக்க கண்ணை விரல்களால் தோண்டி எடுத்துள்ளார்.
அந்நிலையில் அங்கு கூடிய அயலவர்கள் தந்தையை மகனிடம் இருந்து காப்பாற்றி வாழைச்சேனை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்தனர், பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தந்தையை தாக்கி , கண்ணை நோண்டிய மகனை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments