எல்பிடிய ஆதார வைத்தியசாலையில் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட சடலம் ஒன்று காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கே.வி.பிரேமதிலக என்கிற 77 வயதுடைய முதியவரின் சடலமே இவ்வாறு காணாமல்போயுள்ளது.
திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வீட்டிலேயே அவர் உயிரிழந்திருந்த நிலையில், பிசிஆர் பரிசோதனைக்காக சடலம் எல்பிடிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அங்கு சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனை அடுத்து, சடலத்தை மலர்சாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென உறவினர்கள் கூறிவிட்டு, மலர்சாலைக்கு சென்று பார்க்கும்போது அங்கு சடலம் அங்கு இருக்கவில்லை.
வைத்தியசாலையிலும் அந்த சடலம் இல்லை என வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அந்நிலையில் அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்







No comments