மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வந்த செம்பக்குட்டி செல்லம்மா தனது 109ஆவது வயதில் நேற்று (02) இயற்கை எய்தினார்.
1912 ஆம் ஆண்டு பிறந்த செல்லம்மாவை, அப்பகுதியை சேர்ந்தோர் "செல்லம்மா ஆச்சி" என அன்போடு அழைப்பார்கள். அவர் தனது 109 வயது வரை ஆரோக்கியமாகவே வாழ்ந்து வந்துள்ளார்.
இப் பிரதேசத்தில் அதிகூடிய வயதுடன் வாழ்ந்து வந்த செல்லம்மாவிற்கு 12 பிள்ளைகள், 62 பேரப்பிள்ளைகள், 147 பூட்டப்பிள்ளைகள், 27 கொள்ளுப்பிள்ளைகள் உள்ளனர்.










No comments