திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் வீதியோரமாக கைவிடப்பட்ட நிலையில் , 1 மாத சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கிண்ணியா சம்வாச்சதீவு பகுதியில் வீதியோரமாக கைவிடப்பட்ட நிலையில் ஒரு மாதம் மதிக்க தக்க சிசு காணப்படுவதாக கிண்ணியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சிசுவை மீட்டு கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
அதேவேளை சிசு தொடர்பிலான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
No comments