மாத்தறை வரக்காப்பிட்டிய பகுதியில் வாகனத்தில் சென்றவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகனத்தில் சென்றவர் உயிரிழந்துள்ளார். பாதாள உலக குழுவை சேர்ந்த "சன்ஷைன் சுத்தா " என்று அழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா என்பவரே துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துரே மதூஷுக்கு நெருக்கமானவர் என்றும் , இவரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரங்களில் ஈடுபட்டு வந்த நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.
அதேவேளை கடந்த ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி வெலிகம - மிரிஸ்ஸ மீன் பிடி துறைமுக வளாகத்தில் இவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் , அவர் படுகாயமடைந்திருந்தார்.
அன்றைய தினம் மோட்டார் சைக்கிளில் வருகை தந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் அங்கிருந்து முச்சக்கர வண்டியில் தப்பி சென்று இருந்தனர்.
அந்நிலையிலேயே தற்போது மீண்டும் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.







No comments