கொவிட் 19 கட்டுப்பாட்டிற்காக நாட்டை மேலும் ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்கு மூட வேண்டும் என்பது தனது தனிப்பட்டு கருத்து என கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.அதேபோல், மக்கள் தானாகவே சுகாதார வழிகாட்டுதல்களை உரிய வகையில் கடைப்பிடிப்பதன் ஊடாக கொவிட் நோயில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், டெல்டா வைரஸ் தொற்று பரவியுள்ளதால் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இனங்காணப்படாத கொவிட் தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.
ராகம, வட கொழும்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.







No comments