மடு பிரதேசத்தில் பிள்ளையார் கோவில் ஒன்று அந்தோனியார் தேவாலயமாக இரவோடு இரவாக மாற்றப்பட்டுள்ளது.
மடு பரப்புக்கடந்தான் வீதியில், வீதியோரமாக உள்ள மரமொன்றின் கீழ் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டு , அதனை வீதியால் செல்பவர்கள் வழிபட்டு சென்றனர்.
குறித்த பிள்ளையார் சிலை சுமார் 40 வருடங்களுக்கு மேலாக அவ்விடத்தில் உள்ளதாகவும் , காட்டு பகுதிக்குள் வீதி அமைந்துள்ளதால் , வீதியால் செல்லும் பலரும் மத பேதமின்றி பிள்ளையாரை வழிபட்டு செல்லும் வழக்கம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சிலரால் அப்பிள்ளையாருக்கு கோவில் கட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. முதல் கட்டமாக சிறிய கோவில் ஒன்றும் கட்டப்பட்டு, அதனுள் ஒரு பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இனம் தெரியாத நபர்கள் . பிள்ளையார் கோவிலில் இருந்து பிள்ளையாரை அகற்றிவிட்டு , அந்தோனியார் சிலையை வைத்து சீமெந்தினால் கட்டியுள்ளனர்.
சிறிய கோவிலில் இருந்த பிள்ளையார் சிலையும் , மரத்தின் கீழிருந்த பிள்ளையார் சிலையையும் அவர்கள் அபகரித்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் முறைப்பாடு செய்ய முன் வராததால் , பொலிஸார் அது தொடர்பில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிவிக்கப்படுகிறது.









No comments