Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வல்வெட்டித்துறையிலிருந்து மீன்பிடிக்க சென்ற இரு மீனவர்கள் படகுடன் மாயம்!


வல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்க சென்ற இரு மீனவர்கள் படகுடன் காணாமல் போயுள்ளனர். 

வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியை சேர்ந்த இராகவன் , வளவன் ஆகிய இரு மீனவர்களும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் நேற்றைய தினம் கரை திரும்பாததை  அடுத்து , சக மீனவர்கள் அவர்களை தேடி சென்று இருந்தனர். 

அந்நிலையில் காணாமல் போன மீனவர்களின் வலைகள் அறுந்த நிலையில், தேடி சென்ற மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளது.  

அது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

அதேவேளை, அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற இரு மீனவர்களின் படகின் மீது இந்திய இழுவை படகு மோதியதில் , அவர்களின் படகு பலத்த சேதமடைந்துள்ளது. 
சேதமடைந்த படகில் அவர்கள் இருவரும் பத்திரமாக கரை திரும்பி இருந்தனர். 

அதனால் , காணாமல் போன மீனவர்களின் வலைகள் அறுந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளமையால் , அவர்களின் படகின் மீதும் இந்திய இழுவை படகு மோதி விபத்து இடம்பெற்று மீனவர்களின் படகு கடலில் மூழ்கி இருக்கலாம் எனவும் , அதனால் மீனவர்களும் கடலில் காணாமல் போயிருக்கலாம் எனவும் , அப்பகுதியினர் இடையில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது. 

No comments