Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வீட்டிலிருந்து சகோதரர்கள் சடலமாக மீட்பு - இருவருக்கும் கொரோனோ தொற்று உறுதி!


கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சகோதரர்கள் இருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

பூகொட - யகம்பே பகுதியை சேர்ந்த  43 வயதுடைய சகோதரியும் , 38 வயதுடைய சகோதரனும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை பெற்றுள்ளனர். 
 
அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உறவினர் ஒருவர் அவர்களின் வீட்டுக்கு சென்ற போது , அவர்கள் இருவரும் வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். 
 
அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் சடலத்தை மீட்டு வத்துபிடிவல ஆதார வைத்திய சாலையில் ஒப்படைத்தனர். 
 
வைத்திய சாலையில் இரு சடலங்களுக்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட போது , இருவருக்கும் தொற்று இருந்தது உறுதியானது. அதனை அடுத்து சடலத்தை சுகாதார பிரிவினர் பொறுப்பெடுத்து , தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். 

No comments