மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளான சகோதரர்கள் இருவர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் கடந்த 05ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,
அன்றைய தினம் இரவு 8 மணியளவில் சகோதரர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அருகில் ஊள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று எரிபொருள் நிரப்பி விட்டு வீடு திரும்பும் போது , வீதியில் வழிமறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் வீதியில் நடமாடுகிறீர்களா என கேட்டு அவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.
அதனால் சகோதரர்கள் இருவரும் முகத்தில் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதில் ஒருவரின் கண் மிகவும் பாதிப்படைந்து உள்ளதாகவும் , அவருக்கு கண்ணில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் இளைஞர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.









No comments