தாய் உயிரிழந்த சோகத்தில் மகன் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
வெள்ளவத்தை பகுதியில் வசிக்கும் பொறியியல் துறை மாணவனே அவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
மாணவனின் தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவரை களுபோவில் வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி தாயார் உயிரிழந்துள்ளார்.
தாய் உயிரிழந்த செய்தியினை வீட்டில் இருந்த தனது இளைய சகோதரனுக்கு மூத்த சகோதரன் தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார். அதனை கேள்வியுற்ற வீட்டில் இருந்த மகன் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









No comments