ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை - வெலிகம பிரதேச சபை உறுப்பினராக பிரசாத் மிலிந்த காணி பிரச்சினை காரணமாக அவரது பெற்றோரை கொடூரமாக தாக்கியுள்ளதாக அவரின் இளைய சகோதரன் நிரேஷ் கிஷாந்த தெரிவித்துள்ளார்.
காயமடைந்த பெற்றோர் மாத்தறை பொது மருத்துவமனை மற்றும் அஹங்கம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், நிரேஷின் பிள்ளை இந்தச் சம்பவத்தை தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெலிகம பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த போதிலும், இதுவரை விசாரணைகளை மேற்கொள்ள வில்லை என அவரது இளைய சகோதரர் நிரேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனாலும் தாம் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments